சிதம்பரம்-திருமாவை எதிரித்து தடா பெரியசாமி!

சிதம்பரம்: சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளன் போட்டியிட்டால் அவரை எதிர்த்து 'தடா' பெரியசாமி பேட்டியிடுவார் என்று தெரிகிறது. ஆரம்ப காலங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாகியாக வலம் வந்தவர் 'தடா' பெரியசாமி. இவருக்கும் திருமாவளவனுக்கும் இடையே மன கசப்பு வரவே அக் கட்சியில் இருந்து விலகினார். கடந்த 2004 ம் ஆண்டு தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட 'தடா' பெரியசாமி சுமார் 1.25 லட்சம் வாக்குகள் பெற்றார். இந் நிலையில் திருமாவளவன் சிதம்பரத்தில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து போட்டியிட 'தடா' பெரியசாமி தாயாராகி வருவதாகக் கூறப்படுகின்றது. பெரியசாமிக்கு தேர்தல் நேரத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் உதவலாம் என்றும் கூறப்படுகிறது. திருமாவளவன், பெரியசாமி மோதினால் சிதம்பரம் தொகுதியில் போட்டி மிகக் கடுமையாக இருக்கும்.