பஞ்சமி நிலம் வரலாறு:

ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தின் பொறுப்பு ஆட்சியராக இருந்த ஜேம்ஸ் ட்ரெமென்கீர் “பறையர்கள் பற்றிய குறிப்புகள்” என்ற பெயரில் பறையர்கள் குறித்த அறிக்கை ஒன்றை தயாரித்து ஆங்கிலேய அரசிடம் 1891ஆம் ஆண்டு தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் பறையர்களுக்கு நிலம் வழங்குவதன் மூலம் அவர்கள் வாழ்வை மேம்படுத்த இயலும் என்ற கருத்தை பதிவு செய்திருந்தார்.[2][3][4] இந்த அறிக்கை ஆங்கிலேய நாடாளுமன்றத்தில் 1892, மே 16ஆம் தேதி விவாதத்துக்கு வந்ததை ஒட்டி, பஞ்சமி நிலம் தொடர்பான சட்டம், 30 செப்டம்பர் 1892இல் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. [5]பஞ்சமி நிலச்சட்டப்படி இந்தியா முழுவதும் 12.5 இலட்சம் ஏக்கர் விளைநிலங்கள் தலித் மக்களுக்கு இலவசமாக அரசால் வழங்கப்பட்டது. அன்றைய சென்னை மாகாணத்தில்மட்டும் தலித் மக்களுக்கு 2 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் இலவசமாக அரசால் வழங்கப்பட்டது.

பிரித்தானிய இந்திய அரசின், வருவாய்த்துறையின் பதிவேடுகளில், அனைத்து விளைநிலங்களை பஞ்சமி நிலம் என்று தனியாகவும் மற்ற நிலங்களை, நத்தம் புறம்போக்கு நிலம்புறம்போக்கு நிலம்மானாவாரி நிலம்தரிசு நிலம்நீர்பாசான சாகுபடி நிலம் என்று வகைப்படுத்தியுள்ளது.

பஞ்சமி நிலம் மீட்பு:

பஞ்சமி நிலங்கள் உரிய ஆதி திராவிடர்கள் தவிர பிற சமூகத்தினர் உரிமை கோர இயலாது. பஞ்சமி நிலத்தை ஆதி திராவிடர் அல்லாதோர் வாங்கவோ, அனுபவிக்கவோ, குத்தகைக்கோ பெறவோ இயலாது. [6]. விவரம் அறியாது வில்லங்கப்படுத்திய பஞ்சமி நிலத்தை மீண்டும் அடைவதற்கு, ஆதி திராவிடர்கள் போராடி வருகின்றனர்.[7][8] [9] [10]. பஞ்சமி நிலங்களை மீட்கும் பொருட்டு, முதலில் தமிழ்நாடு அரசு பஞ்சமி நிலங்கள் குறித்து ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைத்துள்ளது.[11]சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆணையின்படி, தமிழ்நாடு அரசு பஞ்சமி நிலங்களை மீட்பது குறித்து குழு அமைத்துள்ளது.

பஞ்சமி நில விவரங்கள்:

1891ம் ஆண்டில், செங்கல்பட்டில் ஆட்சியராக இருந்த டிரெமன்ஹரே என்கிற ஆங்கிலேயர்,  லண்டனிலுள்ள அரசிக்கு ஒரு கடிதம் எழுதினார்.  இந்த கடிதத்தின் அடிப்படையில்,  பிரிட்டிஷ் பாராளுமன்றம், 1892 ம் ஆண்டில் ஒரு சட்டத்தை இயற்றியது.

இந்த சட்டத்தின்படி, இந்தியா முழுவதும், தாழ்த்தப்ப்ட்ட மக்களுக்கு நிலங்களை இலவசமாக அளித்தது.  இந்த நிலங்களீல், தாழ்த்தப்பட்ட மக்கள் பயிர் செய்தோ, வீடுகள் கட்டிக்கொண்டோ அனுபவிக்கலாம்.  குறைந்தது 10 ஆண்டுகளுக்கு பிறகு தான், அவர்கள் இந்த நிலங்களை பிறர் பெயருக்கு மாற்ற முடியும்.  அதுவும், அவர்கள் விற்பதாக இருந்தால், அவர்கள் வகுப்பைச்சார்ந்த (Depressed Class) வர்களிடம் தான் விற்க முடியும்.  வேறு வகுப்பினரிடம் விறறால் அந்த விற்பனை செல்லாது.

அரசின் வருவாய் துறை ஆவணங்களில் பஞ்சமி நிலங்களைப்பற்றிய விவரங்கள் உள்ளன.

தவறுதலாக, யாராவது, இந்த பஞ்சமி நிலங்களை வேறு வகுப்பினரிடம் விற்க முற்பட்டால், பத்திர பதிவு அதிகாரி, அதை பதிவு செய்யக்கூடாது. மீறி வாங்கினால்,  எந்த காலத்திலும், அந்த நிலங்களை வாங்கியவரிடமிருந்து, அரசு பறிமுதல் செய்யலாம்.  அதற்கு நஷ்ட ஈடு கிடையாது.

இந்த சட்டம், தாழ்த்தப்பட்ட மக்களை யாரும் ஏமாற்றி விடக்கூடாது என்கிற எண்ணத்தில், ஆங்கிலேய அரசால் உருவாக்கப்பட்டது.

இந்த சட்டத்தை பற்றிய ஒரு குறிப்பும், சென்னை உயர்நீதி மன்ற தீர்ப்பில், விவரமாக இருக்கிறது.

1950க்கு பிறகு, ஆசார்ய வினோபா அவர்கள் பூதான இயக்கத்தின் படியும், பல நிலங்களை இதே சட்டப்படி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசின் மூலம் வழங்கினார். 1960களிலும், கூட்டுறவு முறையிலும் நிலங்கள் இந்த அடிப்படையில் வழங்கப்பட்டன.  Depressed Class என்கிற பெயர் இந்திய அரசியல் சட்டத்தில், Scheduled caste  பட்டியல் வகுப்பினர் (அட்டவணை வகுப்பினர்) என்று மாற்றப்பட்டது.

இந்திய அளவில், எவ்வளவு நிலங்கள், இந்த பஞ்சமி நிலங்களாக கொடுக்கப்பட்டுள்ளன என்பது பற்றிய சரியான் புள்ளி விவரங்கள் இல்லை.  திமிழ் நாட்டில் சுமார் 2.5 லட்சம் ஏக்கர் நிலங்கள் பஞ்சமி நிலங்களாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.  ஆனால் சென்னை உயர் நீதி மன்ற தீர்ப்பில் 12 லட்சம் ஏக்கர் நிலங்கள் முந்தைய சென்னை மாகாணத்தில் (கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா) பஞ்சமி நிலங்களை கொடுத்ததாக  குறிப்பிட்டுள்ளார்கள்.  இந்திய அளவில், சுமார் 25 லட்சம் ஏக்கர் நிலங்கள் பஞ்சமி நிலங்களாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.  

காலப்போக்கில், பஞ்சமி நிலங்கள் பிற வகுப்பினருக்கு விற்கப்பட்டுள்ளன.  விற்கப்படாத நிலங்க்ளின் பெரும் பகுதி, மற்றவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.  இது பற்றிய புள்ளிவிவரங்கள் தமிழ்நாட்டு அளவில் இல்லை.  

பிரபல ஆதி திராவிட தலைவரும், விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தின் நிறுவனருமான (தற்போது அவர் இந்த இயக்கத்தில் இல்லை) திரு தடா பெரியசாமி, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் (RTI Act), பெரம்பலூர் மாவட்ட புள்ளி விவரங்களை பெற்றுள்ளார்.

அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் மூன்று தாலுக்காக்களில், 134 கிராமங்கள் உள்ளன. அதிகாரபூர்வ தகவல்கள் படி, 4442 ஏக்கர் நிலங்கள் பஞ்சமி நிலங்களாக உள்ளன.  அதில் 1263 ஏக்கர் நிலங்கள் 948 பேருக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

மீதமுள்ள 3180 ஏக்கர் நிலங்கள் 3148 பேர் பெயரில் உள்ளன.  இந்த நிலங்கள் ஆதி திராவிட மக்கள் பெயரில் இருந்தாலும், சுமார் 25 சத்விகிதம் நிலங்கள் மற்ற வகுப்பினரால் ஆக்கிரமிகப்பட்டு அனுபவிக்கப்படுகிறது என்று தடா பெரியசாமி கூறுகிறார்.  அனைத்தையும் கூட்டி கழித்து பார்த்தால், சுமார் 2000 ஏக்கர் நிலங்கள், அதாவது, 50 சதவிகித பஞ்சமி நிலங்கள், பிறாரல் அனுபவிக்கப்படுகின்றன என்று தடா பெரியசாமி கூறுகிறார்.