தமிழ் தேசியம் மற்றும் கம்யூனிச சித்தாந்தத்தில் இருந்து விலகி தலித் அரசியலை முன்னெடுத்த தடா பெரியசாமி திருமாவளவனின் நட்பு கிடைக்கிறது .1992 காலகட்டத்தில் இந்திய ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள்- DPI என்று மதுரையில் செயல்பட்ட அந்த இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொள்கிறார். பிறகு தமிழ்த்தேசிய கருத்துக்களால் இந்திய ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள் என்ற பெயரை விடுதலை சிறுத்தைகள் என்று மாற்றி அமைத்துக்கொள்கிறார்கள்.

1993 இல் மீண்டும் தடா வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறைக்கு செல்கிறார் இரண்டரை ஆண்டுகள் சிறைக்கு பின் மீண்டும் கடுமையான கட்சி பணிகளை செய்கிறார். 1999 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட முடிவெடுத்து மூப்பனார் அமைத்த கூட்டணியில் சேர்ந்து சிதம்பரம் ,பெரம்பலூர் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் போட்டியிட்டது. அதில் சிதம்பரத்தில் திருமாவளவனும் , பெரம்பலூரில் தடா பெரியசாமியும் போட்டியிட்டனர் அதில் திருமா 2.5 லட்சம் வாக்குகளும், தடா 1 லட்சம் வாக்குகள் வாங்குகிறார்கள்.

2001 சட்டமன்ற தேர்தலில் திமுக வோடு கூட்டணி அமைத்து 10 தோதிகளில் போட்டி இட்டது அதில் தடா பெரியசாமி அரூர் தொகுதியில் போட்டியிட்டு தோற்றுப்போனார்.

2002 பிறகு திருமவளவனோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தடா பெரியசாமியை திருமாவளவனால் கட்சில் இருந்து நீக்கப்படுகிறார்.