தமிழ்நாடு பொதுவுடைமை கட்சியில் இருந்து தேசிய இன பிரச்சனையை மையப்படுத்தி பிரிந்த தமிழரசன் தமிழ்நாடு விடுதலை படையை துவக்கினார் அதில் தடா பெரியசாமியும் தன்னை இணைத்துக்கொண்டார். தமிழ் தேசியம், தனி தமிழ்நாடு போன்ற கோரிக்கைகளை அவர்கள் முன் வைத்தனர். அந்தவகையில் 1987 ஆம் ஆண்டு அரியலூர் மருதையாற்று பலத்தை வெடிகுண்டு வைத்து தகர்த்தனர் அந்த வழக்கில் தடா பெரியசாமி, தென்தமிழன், கருணாகரன் ஆகிய மூவருக்கும் தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. இந்த வழக்கின் உயர் நீதிமன்றத்தின் மேல் முறையீட்டில் தடா பெரியசாமி குற்றமற்றவர் என்றுஉயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
மற்ற இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.பின்னர் 3 ஆண்டு சிறைக்கு பிறகு சென்னை உயர் நீதி மன்றம் நிரபராதி என்று தீர்ப்பளித்து விடுதலையானார்.

1992ஆ‌ம் ஆ‌ண்டு அ‌க்டோப‌ர் 24ஆ‌ம் தே‌தி திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த கல்லக்குடி பழங்கானத்தம் - கல்லகம் ரெயில் நிலையங்களுக்கு இடையே ரெயில் தண்டவாளம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது.இது தொடர்பாக தமிழ்நாடு விடுதலைப்படை மற்றும் தமிழக மக்கள் விடுதலை படை ஆகிய இயக்கங்களை சேர்ந்த கடலூர் செந்தில்குமார், தடா பெரியசாமி, லெனின், காராளன் என்கிற நாகராஜன், சீலியம்பட்டி ராஜாராம் ஆகியோரை கைது செ‌ய்த கியூ பிரிவு போலீசார், திருச்சி தடா சிறப்பு ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்நிலையில், லெனின் கு‌ண்டுவெடி‌ப்‌‌பிலு‌ம், ராஜாராமும், நாகராஜனும் சென்னையில் நடந்த போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனா‌ல் மற்ற இருவர் மீது மட்டும் வழக்கு விசாரணை திருச்சி ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் நடந்து வந்தது. 20 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கல் தீர்ப்பு அளிக்கப்பட்டது. நீதிபதி பி.வேல்முருகன் அ‌ளி‌த்த ‌தீ‌ர்‌ப்‌பி‌ல், குற்றம்சா‌ற்ற‌ப்பட்ட செந்தில்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் ‌சிறை தண்டனையும், தடா பெரியசாமிக்கு 5 ஆண்டு ‌சிறை தண்டனையும், 4 ஆயிரம் ரூபாய் அபராதமும் அபராதம் கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் ‌சிறை தண்டனையும் விதித்து தீர்ப்ப‌ளி‌த்தா‌ர். பின்னர் 2014 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற மேல் முறையீட்டில் நிரபராதி என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் அவர்கள் தீர்ப்பு வழங்கினார். தடா வழக்கில் ஏறக்குறைய 3 ஆண்டுகள் சிறையில் இருந்தார். எனவே தன் வாழ்நாளில் 6 ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார்