அரசியல் வாழ்க்கை 

தடா பெரியசாமி (பிறப்பு: 5 செப்டம்பர், 1962) தமிழக அரசியல்வாதி மற்றும் பட்டியலின மக்கள் செயற்பாட்டாளர் ஆவார். பஞ்சமி நிலம் மீட்புப்பணிக்காக மண்ணுரிமை மீட்பு இயக்கம் என்ற அமைப்பையும்,மற்றும் நந்தனார் சேவாசிரம அறக்கட்டளையை நடத்தி வருகிறார். தற்போது பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார்

பட்டியலின மக்கள் மீதான கொடுமைகளுக்கு எதிராகச் செயல்பட 1983 ஆம் ஆண்டு நக்சல்பாரி அமைப்பில் சேர்ந்தார். அரியலூர் மருதையாற்றுப் பாலம் குண்டுவெடிப்பு வழக்கில் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தூக்குத் தண்டனை பெற்றார்.பின்னர் விடுதலை பெற்று 1990 ஆம் ஆண்டு தொல். திருமாவளவனுடன் இணைந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைத் தொடங்கினார்.2001 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் கூட்டணிக் கட்சியான திமுக சின்னத்தில் போட்டியிட்டுத் தேல்வியடைந்தார். பின்னர் கருத்து வேறுபாட்டால் அக்கட்சியிலிருந்து நீங்கி 2004 இல் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து அதே ஆண்டு சிதம்பரம் மக்களவைத் தொகுதியிலும், 2006 இல் சட்டமன்றத் தேர்தலில் வரகூர் தொகுதியிலும் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.